×

பாஜ கோட்டையை தகர்க்க காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி

அகமதாபாத்: பாஜவின் இரும்பு கோட்டையான குஜராத்தில் இம்முறை மக்களவை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து களமிறங்குவதால் தேர்தல் முடிவுகள் 2009ஐ நோக்கி திரும்ப வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறி உள்ளனர். பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் பாஜவின் தகர்க்க முடியாத கோட்டைகளில் ஒன்றாக இருக்கிறது. 26 தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மே 7ம் தேதி நடக்க உள்ளது.

2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 26 தொகுதிகளையும் மொத்தமாக வென்று பாஜ சாதித்துள்ளது. அந்த தேர்தல்களில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறிய நிலையில் இம்முறை நிலைமை மாறியிருக்கிறது. இந்தியா கூட்டணியில் ஒன்று சேர்ந்துள்ள காங்கிரசும், ஆம் ஆத்மியும் குஜராத்தில் பாஜவை எதிர்த்து களம் காண்கின்றன.

காங்கிரஸ் 24 இடங்களிலும் ஆம் ஆத்மி பரூச் மற்றும் பாவ்நகர் ஆகிய 2 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. கடந்த 2004, 2009 தேர்தல்களில் பாஜவுக்கு சமமாக காங்கிரஸ் தொகுதிகளை வென்றுள்ளது. 2004 தேர்தலில் பாஜ 14, காங்கிரஸ் 12 இடங்களில் வென்றுள்ளன. 2009ல் பாஜ கூட்டணி 15, காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களில் வென்றுள்ளன. இம்முறை பாஜ எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைந்து போட்டியிடுவதால் மீண்டும் குஜராத்தில் 2004, 2009 நிலை திரும்பும் என அரசியல் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

The post பாஜ கோட்டையை தகர்க்க காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி appeared first on Dinakaran.

Tags : Congress-Aam Aadmi Party alliance ,BJP ,AHMEDABAD ,Gujarat ,Congress ,Aam Aadmi Party ,Lok Sabha ,Modi ,Union ,Home Minister ,Amit Shah ,Congress-Aam Aadmi Party ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...